இவர்கள் நம்பிக்கை துரோகிகள்: முகநூலில் படத்தை பதிவிட்டு ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்த கூலித்தொழிலாளி

இவர்கள் நம்பிக்கை துரோகிகள்: முகநூலில் படத்தை பதிவிட்டு ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்த கூலித்தொழிலாளி

தன் குடும்பப் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டு அதில் நம்பிக்கை துரோகிகள் என்னும் வாசகத்தையும் எழுதிவைத்து கூலித் தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே தண்டவாளத்தில் இன்று காலையில் ஆண் சடலம் ஒன்று ரயிலில் அடிபட்டுக் கிடந்தது. இதுகுறித்துத் தகவல் அறிந்ததும் நாகர்கோவில் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி அவர் யார் என விசாரணையைத் தொடங்கினர். அப்போது சடலத்தின் அருகிலேயே ஆதார் அட்டை ஒன்று இருந்தது. அதன்படி இறந்தவர் வள்ளியூர் அருகே உள்ள ராதாபுரம் தெற்குத் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முருகன் எனத் தெரியவந்தது.

இவர் ரயிலில் அடிபட்டு இறப்பதற்கு முன்பாகத் தான் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டு ‘நம்பிக்கைத் துரோகிகள்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் கூலித் தொழிலாளி முருகன் குடும்பப் பிரச்சினையால் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகித்துள்ளனர். அதன் அடிப்படையில் முருகனின் குடும்பத்தினருடன் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in