அடுக்குமாடி குடியிருப்பு சமையலறையில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடி: கேரள காதல் ஜோடி சிக்கியது எப்படி?

அபர்ணா
அபர்ணா

கேரளத்தில் தன் காதலன் கொடுத்த கஞ்சா செடியை தன் வீட்டு சமையலறையில் வளர்த்துவந்தார் காதலி. இதுகுறித்து போலீஸாருக்குத் தெரியவர காதலன், காதலி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆலன்
ஆலன்

கேரளத்தின் கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பாக போலீஸார் சோதனை செய்தனர். அப்போது அங்கு வசித்துவந்த மென் பொறியாளர் ஆலன் என்பவரது வீட்டில் போலீஸார் சோதனை செய்தனர்.

அப்போது இன்னொரு அறையில் இருந்து அவரது காதலி அபர்ணா வந்தார். போலீஸார் இருவரிடமும் நடத்திய விசாரணையில் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதை ஒப்புக்கொண்டனர். போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது அதிர்ந்தனர். சமையலறையில் ஒன்றரை மீட்டர் உயரத்திற்கு கஞ்சா செடி இருந்தது. இணையத்தை பயன்படுத்தி கூகுள் தேடலில் கஞ்சா விதையைப் பெற்றுள்ளனர். அந்த செடிக்கு காற்றுகிடைக்க சிறிய ரக பேன், சூரிய வெளிச்சத்திற்காக சின்னதாக எல்.இ.டி ஆகியவற்றையும் இவர்கள் வைத்துள்ளனர். தங்கள் காதலின் அடையாளமாக இவர்கள் கஞ்சா செடி வளர்த்ததைக் கேள்விப்பட்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இப்போது காதல் ஜோடி ஆலனும், அபர்ணாவும் எர்ணாக்குளம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவ்விவகாரத்தில் கஞ்சா விதைகள் இந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு பார்சல் வந்துள்ளது. அதன் அடிப்படையிலேயே போலீஸார் தேடிவந்து, காதல் ஜோடி சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in