10, +2 தேர்வானவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

பெல் நிறுவனம்
பெல் நிறுவனம்

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பி.ஹெச்.இ.எல்) நிறுவனத்தில் ' முதன்மை ஆலோசகர்' மற்றும் சூப்பர்வைசர்கள் பணிக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பணிபுரிய முதன்மை ஆலோசகர் பணிக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த வேலைவாய்ப்புக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் டெல்லி மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர்.

இதற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ.1,25,000 மாத ஊதியம் வழங்கப்படும். ஆன்லைன் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர். AMIE, பொறியியல், பி.டெக்., எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகால பணி அனுபவம் இருக்க வேண்டும்.

ரயில்வே துறையில் பணி செய்து ஓய்வு பெற்றவர்கள், மெட்ரோ பணியில் வேலை பார்த்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 63 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இது ஓராண்டுகால ஒப்பந்தம் அடிப்படையிலான பணி. பணித்திறன் அடிப்படையில் பணிக்காலம் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இம்மாதம் 15ம் தேதி கடைசி நாளாகும். 

விண்ணப்பதாரர்கள் BHELன் அதிகாரபூர்வ வலைதளமான https://careers.bhel.in:8443/bhel/jsp/#openings- ,ஹோம் பக்கத்தில் உள்ள மெனு பிரிவுகளில் "Careers" என்பதை அடுத்து “BHEL Recruitment 2023” என்ற இணைப்பை திறந்து தங்களது விவரங்களை பூர்த்தி செய்து உடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றி சப்மிட் செய்ய வேண்டும்.

இதேபோல மெக்கானிக்கல், சிவில் மற்றும் ஹச்.ஆர் சூப்பர்வைசர்கள் பணியிடத்திற்கும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.  இந்த வேலைவாய்ப்புக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் திருச்சி, போபால், ஹைதராபாத், ஹரித்வார், ஜான்சி, கார்ப்ரேட் ஆபிஸ், பவர் செக்டார் உள்ள அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவர்.

இதற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ.32,000 - 1,00,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும். ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 65% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இது இரண்டு ஆண்டுகால ஒப்பந்தம் அடிப்படையிலான பணி. இதற்கு விண்ணப்பிக்க ஜி.எஸ்.டி.-யுடன் சேர்த்து ரூ.795 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ப்ராசசிங் கட்டணம் செலுத்த வேண்டும். எழுத்து தேர்வு டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரபூர்வ இணையதள முகவரி-https://www.apprenticeshipindia.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து மற்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இதற்கு இம்மாதம் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in