பகீர்; காதலித்த வாலிபருக்கே மனைவியை திருமணம் செய்து வைத்த கணவர்: பீகாரில் அதிர்ச்சி சம்பவம்!

திருமணம்
திருமணம்

ஆசையாக திருமணம் செய்து கொண்ட மனைவி, வேறொருவரை காதலித்ததை அறிந்த கணவர் ஊரை எதிர்த்து அவருக்கே திருமணம் செய்து வைத்த சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் வசித்து வருபவர் அஜய்குமார் ( 24). இவரது மனைவி காஜல் (22). இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமணமாகியது. இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த சூழலில், காஜலுக்கு, அதே பகுதியில் வசித்து வந்த ராஜ்குமார் தாக்கூர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிப் பழகி வந்துள்ளனர். இந்த நிலையில், இவர்களது காதல் விவகாரம் காஜலின் கணவர் அஜய்குமாருக்கு தெரிய வந்துள்ளது.

மனைவி வேறு ஒரு நபரை காதலிக்கிறார் என்று அறிந்த அஜய்குமார் அதிர்ச்சியடைந்துள்ளார். தனக்காகவும், தன் குழந்தைகளுக்காகவும் காஜலிடம் பேசியுள்ளார். ஆனால், அவர் ராஜ்குமாரை தீவிரமாக காதலிப்பதாகவும், அவர் இல்லாமல் வாழ முடியாது என்றும் கணவனிடம் கூறியிருக்கிறார். இதை உணர்ந்த அஜய்குமார் இனியும் காஜலுடன் வாழ்வது சரியல்ல என முடிவு செய்தார். 

அத்துடன் அவர் காஜலை அவரது காதலுனுடனேயே திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இதையடுத்து, அதே ஊரில் உள்ள கோயிலில் தனது மனைவி காஜலுக்கும், ராஜ்குமார் தாக்கூருக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார். அஜய்குமாரின் இந்த செயலுக்கு அந்த ஊர்க்காரர்களும், அவர்களது உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

ஆனாலும், தனது முடிவில் இருந்து பின்வாங்காத அஜய்குமார் தனது மனைவி காஜலுக்கும், அவர் காதலித்த ராஜ்குமாருக்கும் கோயிலில் நேற்று திருமணம் செய்து வைத்தார். அவர்களுக்கு திருமணம் செய்து வைத்ததன் மூலமாக தனது ஊர்க்காரர்களிடம் இருந்தும், அவர்களது குடும்பத்தினரிடம் இருந்தும் காஜல் – ராஜ்குமாரை காப்பாற்றலாம் என்று அஜய்குமார் கருதியதாலே இந்த ஏற்பாட்டை அவர் செய்ததாகவும் கூறியுள்ளார். 

திருமணம்
திருமணம்

மேலும், இரண்டு குழந்தைகளையும் தானே வளர்த்துக் கொள்வதாகவும் மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால், காஜல் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் தன்னுடனே அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். கணவனே தனது மனைவியின் காதலுக்காக அவர் விரும்பிய நபருடன் அவருக்கு ஊரார் முன்னிலையில் திருமணம் செய்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

HBD Geminiganesan|தமிழ் சினிமாவின் காதல் மன்னன்... ‘ஜெமினி கணேசன்’ பிறந்தநாள் ஸ்பெஷல்!

HBD Roja|ஆந்திர அரசியலின் பீனிக்ஸ் பறவை நடிகை ரோஜா பிறந்தநாள் ஸ்பெஷல்!

இன்று வங்கக்கடலில் உருவாகிறது 'மிதிலி' புயல்... வானிலை மையம் எச்சரிக்கை!

அதிர்ச்சி அறிவிப்பு: டெல்லி செல்லும் தென்மாவட்ட ரயில்கள் முழுமையாக ரத்து!

அதிர்ச்சி: பயிற்சியின் போது மாரடைப்பால் 30 வயது விமானி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in