மனைவி கண் முன் நாக்கை அறுத்து அம்மனுக்குப் படைத்த கணவன்: உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

மனைவி கண் முன் நாக்கை அறுத்து  அம்மனுக்குப் படைத்த கணவன்: உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தனது மனைவி கண் முன் நாக்கை அறுத்து அம்மனுக்கு படைத்த பக்தர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம், கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள கடடாமில் உள்ள ஷீத்லா தாம் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு கௌசாம்பி பகுதியைச் சேர்ந்த பக்தர் சம்பத் (38). என்பவர், தனது மனைவி பன்னோ தேவியுடன் இன்று வந்தார். அங்கு கங்கை நதியில் நீராடிவிட்டு ஷீத்லா தாம் கோயிலுக்கு வந்தார். சாமி கும்பிட்டு பிரகாரத்தைச் மனைவியோடு சம்பத் சுற்றி வந்தார். திடீரென தனது நாக்கை பிளேடால் அறுத்து அம்மனுக்கு சம்பத் காணிக்கையாக செலுத்தினார்.

இதனால் அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார். உடனடியாக தனது கணவரை மஞ்சன்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு அவரது நிலை நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கர்ஹா தாம் காவல் நிலைய போலீஸார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in