கிணற்றுக்குள் கிடந்த மனித எலும்புக்கூடு: அடையாளம் கண்டுபிடிக்க போலீஸார் தீவிரம்

 மனித எலும்புக் கூடு
மனித எலும்புக் கூடு

நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் உள்ள டிவிடி காலணியில் கிணறு ஒன்றில் மனித எலும்புக்கூடு கிடந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் டிவிடி காலணி செந்தூரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவர் தன் பணிக் காரணமாக குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான இடத்தில் பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. அங்கு இன்று காலையில் மனித எலும்புக்கூடு ஒன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் கோட்டாறு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் கயிறுகட்டி எலும்புக்கூட்டை மேலே எடுத்தனர். எலும்புக்கூட்டை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் தொடர் விசாரணையில் காலியிடமான அங்கு அடிக்கடி வாலிபர்கள் மது அருந்துவது வழக்கம். அப்படி மது அருந்தியதில் யாரேனும் போதையில் விழுந்து இறந்தார்களா? அல்லது, யாரும் கொலை செய்து உள்ளே தள்ளினார்களா? என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் கடந்த 4 மாதங்களில் காணாமல் போனவர்களின் பட்டியலைச் சேகரித்தும் போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in