சென்னையில் 4 வயது சிறுவனை கொன்றது குதிரை: விளையாடிக் கொண்டிருந்தபோது நடந்த பயங்கரம்

சென்னையில் 4 வயது சிறுவனை கொன்றது குதிரை: விளையாடிக் கொண்டிருந்தபோது நடந்த பயங்கரம்

சென்னையில் 4 வயது சிறுவனை குதிரை எட்டி உதைத்துக் கொன்றது. வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த சங்கர் நகர், பம்மல் பகுதியில் வசித்து வருபவர் டில்லிராஜ்(39). இவர் கால் டாக்சி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது 4 வயது குழந்தை கெளதம்(4) நேற்று மாலை வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டின் அருகே மேய்ச்சலில் இருந்த குதிரை ஒன்று குழந்தையின் மார்பில் எட்டி உதைத்ததில் குழந்தை வலியால் துடித்தது. உடனே பெற்றோர் குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு குழந்தைக்கு முதலுதவி அளித்த மருத்துவர்கள், குழந்தையை மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார் குழந்தையின் உடலை கைப்பற்றினர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குதிரை எட்டி உதைத்து 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெற்றோர்கள், உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in