மதுரை மத்திய சிறை அருகே குப்பைத் தொட்டியில் கிடந்த துப்பாக்கி: போலீஸார் அதிர்ச்சி

குப்பைத் தொட்டியில் கிடந்த துப்பாக்கி
குப்பைத் தொட்டியில் கிடந்த துப்பாக்கி

மதுரை மத்திய சிறை எதிரே குப்பைத் தொட்டியில் கிடந்த துப்பாக்கியை காவல்துறையினர் எடுத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை புது ஜெயில் ரோடு பகுதியில் உள்ளது மதுரை மத்திய சிறைச்சாலை. சிறைவாசலின் அருகே சிறைத்துறை டிஐஜியின் குடியிருப்பு அமைந்துள்ளது. அதன் அருகே மாநகராட்சி குப்பைத் தொட்டி உள்ளது. இந்நிலையில், இன்று காலை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இருவர் குப்பைத் தொட்டியை சுத்தம் செய்தபோது தொட்டிக்குள் பையில் துப்பாக்கி ஒன்று கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அருகில் உள்ள காவலர்களிடம் அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு கரிமேடு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். மேலும், துப்பாக்கியை எடுத்துச் சென்ற காவல்துறையினர் அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், குப்பைத்தொட்டியில் கிடந்த துப்பாக்கி ஏர் கன் வகையைச் சார்ந்தது என்று தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகம் உள்ள சிறைவாசலில் எவ்வாறு துப்பாக்கி கொண்டுவரப்பட்டது என்ற அடிப்படையில் காவல்துறை விசாரித்து வருகின்றனர். கைதிகள் யாரும் கொண்டு வந்துள்ளனரா? இல்லை சாலையில் சென்றவர்கள் யாரும் துப்பாக்கியை வீசி சென்றுள்ளனரா என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in