காதலிக்க மறுத்த பட்டதாரி பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து: வீடு புகுந்து வாலிபர் நடத்திய வெறிச்செயல்!

காதலிக்க மறுத்த பட்டதாரி பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து: வீடு புகுந்து வாலிபர் நடத்திய வெறிச்செயல்!

காதலிக்க மறுத்த பட்டதாரி பெண்ணை வாலிபர் ஒருவர் வீடு புகுந்து கத்தியால் குத்திய அதிர்ச்சி சம்பவம் தேனியில் நடந்துள்ளது.

தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த பட்டதாரி பெண் அங்குள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் முத்துராஜ் பல வழிகளில் அந்த பெண்ணிடம் தனது காதலை சொல்ல முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த பட்டதாரி பெண், முத்துராஜின் காதலை ஏற்க மறுத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று அந்தப் பெண்ணின் வீட்டுக்கு சென்ற முத்துராஜ் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அப்போது தப்பிக்க முயன்ற முத்துராஜை அவர்கள் மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு முத்துராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் பலத்த காயம் அடைந்த அந்த பெண்ணுக்கு தேனி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காதலிக்க மறுத்த பெண் ஒருவரை வாலிபர் வீடு புகுந்து கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் வரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in