டிபன் பாக்ஸை கழுவி விட்டு ரயிலில் ஏறும் போது விபரீதம்: தவறி விழுந்து அரசு பள்ளி ஆசிரியர் பலி

அரசு பள்ளி ஆசிரியர் அண்ணாமலை
அரசு பள்ளி ஆசிரியர் அண்ணாமலைடிபன் பாக்ஸை கழுவி விட்டு ரயிலில் ஏறும் போது விபரீதம்: தவறி விழுந்து அரசு பள்ளி ஆசிரியர் பலி

மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ரயில் புறப்படும் போது அவசரமாக ஏறிய அரசு பள்ளி ஆசிரியர் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (52). திண்டிவனம் அருகே உள்ள கொடியாம்புதூர் அரசு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரி வரை செல்லும் பயணிகள் ரயிலில் அண்ணாதுரை பள்ளிக்குச் செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று காலை ரயிலில் அவர் செல்லும் போது வீட்டில் எடுத்துச் செல்லும் உணவைச் சாப்பிட்டு மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் பாத்திரத்தை கழுவதற்காக ரயில் இருந்து இறங்கியுள்ளார். அங்கு உள்ள குழாயில் பாத்திரம் மட்டும் கழுவிட்டு மீண்டும் ரயிலில் ஏறுவதற்காக  வந்துள்ளார்.

அப்போது ரயில் புறப்பட்டுள்ளது. இதனால் அவசரமாக ஓடி வந்து அண்ணாதுரை ஏறும் போது கால் தவறி பிளாட்பாரத்திலிருந்து கீழே விழுந்தார். இதனால் அவர் பயணம் செய்த புதுச்சேரி பயணிகள் ரயிலில் சிக்கி அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே பலியானார்.

அவரது உடலை மீட்ட செங்கல்பட்டு ரயில்வே போலீஸார், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in