ஓடும் பேருந்தில் திடீர் மாரடைப்பு: உயிரைக்கொடுத்து பயணிகளைக் காத்த டிரைவர்

புருஷோத்தமன்
புருஷோத்தமன்

தனக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் தான் ஓட்டிக் கொண்டிருந்த பேருந்தை,  ஓரமாக நிறுத்தி பயணிகளின் உயிரைக் காத்த  அரசு பேருந்து ஓட்டுநர் மரணம் அடைந்துள்ளது ஸ்ரீமுஷ்ணம் பகுதியில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திலிருந்து கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வழியாக குணமங்கலம் வரை செல்லக்கூடிய அரசு நகரப் பேருந்து நேற்று ஜெயங்கொண்டத்தில் இருந்து புறப்பட்டது. அரியலூர் மாவட்டம் பெரிய தத்தூர் கிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தமன்  (58) பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்தார். பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். 

ஸ்ரீமுஷ்ணம் எம்ஜிஆர் நகர் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து வந்தபோது புருஷோத்தமனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அதனால் பேருந்து நிறுத்தம் அருகே ஓரமாக நிறுத்தினார்.  பயணிகளை இறங்கினர்,  சிலர் ஏறினர்.  நடத்துநர் பேருந்தை  இயக்குவதற்கு விசில் அடித்தார்.  ஆனால் பேருந்து புறப்படவில்லை.  திரும்பவும் விசில் அடித்த நடத்துநர்,  அப்போதும் பேருந்தை  ஓட்டுநர் இயக்காததால்  சந்தேகம் அடைந்து  புருஷோத்தமனிடம் அருகில் வந்தார்.  அப்போது நெஞ்சை பிடித்துக் கொண்டு புருஷோத்தமன் தவித்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது.  

நெஞ்சு வலியில் மயங்கிய புருஷோத்தமனை  நடத்துநர் மற்றும் பயணிகள் உடனடியாக  ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.  அங்கு பரிசோதித்த மருத்துவர், அவர்  ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது நடத்துநர் மற்றும் பயணிகளை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியது.  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in