நிர்வாணப் புகைப்படம், வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன்: வாலிபர் மிரட்டலால் 12 வயது சிறுமி செய்த அதிர்ச்சி காரியம்

நிர்வாணப் புகைப்படம், வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன்: வாலிபர் மிரட்டலால் 12 வயது சிறுமி செய்த அதிர்ச்சி காரியம்

நிர்வாணப்புகைப்படம், வீடியோ எடுத்து வாலிபர் பிளாக்மெயில் செய்ததால் தனது வீட்டில் 5 லட்ச ரூபாய், நகைகளை 12 வயது சிறுமி திருடிய சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரின் 12 வயது மகள் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில், அமான் என்பவருடன் பள்ளி சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் பின் இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர்.

இந்த நிலையில், சிறுமியை அமான், நிர்வாணமாக புகைப்படம், வீடியோ எடுத்துள்ளார். அவற்றைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அப்படி பணம் தராவிட்டால் உன் நிர்வாணப்புகைப்படங்கள், வீடியோவை இணையதளங்களில் பரப்பி விடுவேன் என்று அமான் மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன சிறுமி, தனது வீட்டில் இருந்த வைர மோதிரம், நெக்லஸ், கழுத்து வைர செட், வைர வளையல்கள், தங்க செயின், தங்க லாக்கெட் உள்ளிட்ட நகைகளைத் திருடி அமானிடம் கொடுத்துள்ளார். அத்துடன் தனது வீட்டில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக 5 லட்ச ரூபாயையும் திருடிக் கொடுத்துள்ளார்.

வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து, விசாரணை மேற்கொண்ட காவல்துறையினருக்கு அந்த சிறுமியின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, தன்னை நிர்வாணமாக புகைப்படம், வீடியோ எடுத்து அமான் மிரட்டுவதாகவும் பணம் தரவில்லை எனில் புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை இணையத்தில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, அமான் மீது போக்சோ , பாலியல் வன்கொடுமைச் சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in