பாட்டியிடம் செயினை பறிக்க முயற்சி; 10 வயது பேத்தி காட்டிய அதிரடி: தெறித்து ஓடிய திருடன்

தெறித்து ஓடிய திருடன்
தெறித்து ஓடிய திருடன் பாட்டியிடம் செயினை பறிக்க முயற்சி; 10 வயது பேத்தி காட்டிய அதிரடி: தெறித்து ஓடிய திருடன்

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பாட்டியிடம் செயினை பறிக்க முயன்ற திருடனை சரமாரியாக தாக்கியுள்ளார் பேத்தி. திருடனிடம் இருந்து பாட்டியையும், செயினையும் காப்பாற்றிய சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகே உள்ள மாடல்காலனி பகுதியில் வசித்து வருபவர் லதாகாக். 60 வயதான இவர், தனது இரண்டு பேத்திகளுடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றுள்ளார். அருகில் இருந்த 10 வயது பேத்தி ருத்விகா உடனடியாக சுதாரித்துக்கொண்டு தான் வைத்திருந்த பையை கொண்டு அந்த நபரின் முகத்தில் சரமாரியாக அடித்துள்ளார். இதில் நிலைகுலைந்து போன அந்த நபர், அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்றார். இதன் சிசிடிவி காட்சிகளை தற்போது காவல்துறை வெளியிட்டுள்ளது. தங்க நகையை மட்டுமின்றி தனது பாட்டியையும் காப்பாற்றி சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in