திருடச் சென்ற இளைஞரை இரும்புக்கம்பியால் அடித்துக் கொன்ற கும்பல்: சென்னையில் பயங்கரம்

சாகின்ஷா காதர்
சாகின்ஷா காதர்

சென்னையில் திருடச்சென்ற வாலிபரை இரும்பு, கட்டையால் ஒரு கும்பல் தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 8 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டை வெங்கடாபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சாகின்ஷா காதர் (21). நேற்றிரவு தாடர்ந்தர் நகர் பகுதியில் இரும்புக்கம்பியால் தாக்கப்பட்டு படுகாயங்களுடன் கிடந்த சாஷின்ஷா காதரை மீட்டு சைதாப்பேட்டை அரசு மருததுவமனைக்கு சிலர் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த வந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை சென்று மருத்துவர்களிடம் விசாரித்தனர். அவர்களிடம்,சாகின்ஷா காதர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், காதரை தாடர்ந்தார் நகர் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் அடித்துக் கொன்று விட்டதாக குற்றம் சாட்டினர். அத்துடன் சைதாப்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து சைதாப்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, நேற்றிரவு 8.30 மணியளவில் வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த சாகின்ஷா, அவரது நண்பர்கள் வினோத் மற்றும் ஹேமா ஆகிய மூவரும் டூவீலரில் தாடர்ந்தர் நகர் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு இரும்பு திருடச் சென்றது தெரிய வந்தது. அப்போது இரும்புப் பலகையைத் திருடிச் செல்ல முயன்ற போது அதை கண்ட ஊழியர்கள் அவர்களைத் துரத்தியுள்ளனர். இதில் ஹேமா தப்பியோட மற்ற இருவரையும் மடக்கிப் பிடித்து இரும்புக் கம்பி மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் சாகின்ஷா காதர் முதுகு விலா எலும்பு மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கொலை வழக்குப் பதிவு செய்த சைதாப்பேட்டை போலீஸார் சம்பவம் தொடர்பாக கட்டிடத்தின் தள பொறியாளர்கள் உமா மகேஷ்வரன் (33), ஜெயராம் (30), நம்பிராஜ் (29), பாலசுப்பிரமணியன் (29), சக்திவேல் (29), மனோஜ் (29), அஜித் (27) மற்றும் தொழிலாளர் சிவபிரகாசம் (22) ஆகிய 8 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடச் சென்ற இடத்தில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in