தொழில் போட்டியில் தகராறு: பார்ட்னரின் 4 வயது மகனைக் குத்திக்கொன்ற வாலிபர்

கொலை
கொலை

கேரளாவில் தொழில் போட்டியில் 4 வயது சிறுவனை வாலிபர் கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கேரளத்தில் வயநாடு மாவட்டம், மேப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். அவரது மனைவி அனிலா. இந்தத் தம்பதியின் மகன் ஆதிதேவ்(4) ஜெயபிரகாஷீம், இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஜித்தேஷீம் சேர்ந்து தொழில் செய்துவந்தனர். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த ஜித்தேஷ், சிறுவன் ஆதிதேவை கொடூரமாகத் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்து கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் ஆதிதேவ் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று நண்பகல் ஆதிதேவ் பரிதாபமாக உயிரிழந்தார்.

முன்னதாக ஆதிதேவ், தன் தாய் அனிலாவுடன் கடந்த வியாழக் கிழமை அங்கன்வாடி பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஜெயப்பிரகாஷ் உடன் ஏற்பட்ட வணிக ரீதியான மோதலால், கூர்மையான கத்தி போன்ற ஆயுதத்துடன் அங்குவந்த ஜித்தேஷ் இருவரையும் அதைவைத்து தாக்கினார். இதில் படுகாயம் அடைந்ததில் தான் ஆதிதேவ் உயிர் இழந்தார். தொழில்போட்டியில் நான்கு வயது சிறுவன் உயிர் இழந்த சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in