மேட்டூர் அணை திறப்பு: 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணை திறப்பு: 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து தற்போது 85 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், அது ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி வரையிலும் உயர்த்தப்படலாம் என்பதால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் உள்ளிட்ட காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இந்த ஆண்டு இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது மேட்டூர் அணை. அதனால் அணைக்கு வரும் மொத்த நீரும் அப்படியே திறந்து விடப்படுகிறது. முதலில்  25 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்ட நிலையில் அது   கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டு தற்போது 85 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

வினாடிக்கு 85 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுவதால்  காவிரி, மற்றும் கொள்ளிடம் ஆற்றின்  கரையோர மக்கள்  எச்சரிக்கையுடன்  பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.  சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை கடலூர் உட்பட 11 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு இது குறித்து அரசின் சார்பில்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நேற்று இரவு 55 ஆயிரம் கன அடியாக இருந்த மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று காலை 65 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. அதனை எடுத்து காலை 8 மணி நிலவரம் எப்படி 85 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இது படிப்படியாக மேலும் அதிகரிக்கலாம் என்பதால் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் தொடர்ந்து உயர்த்தப்படும் என்று எச்சரிக்கும் அதிகாரிகள் வினாடிக்கு  ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் வரை திறக்கப்பட வாய்ப்புள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in