கொள்ளிடம் ஆற்றில் குதித்து உயிரை மாய்க்க முயன்ற 90 வயது மூதாட்டி: கரம் கோர்த்து காப்பாற்றிய மீனவர், போலீஸ்காரர்

மூதாட்டியை காப்பாற்றி அழைத்து வரும் மீனவர் சேகர் மற்றும் காவலர் தனஜெயன்
மூதாட்டியை காப்பாற்றி அழைத்து வரும் மீனவர் சேகர் மற்றும் காவலர் தனஜெயன்
Updated on
1 min read

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை துரிதமாக  செயல்பட்டு ஆற்றில் குதித்து காப்பாற்றிய மீனவரையும், அவர்களை  படகின் மூலம் பாதுகாப்பாய்  கரை சேர்த்த காவலருக்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மூதாட்டியை நோக்கி நீந்திச் செல்லும் மீனவர்
மூதாட்டியை நோக்கி நீந்திச் செல்லும் மீனவர்

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம்  அருகேயுள்ள  முதலைமேடு திட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி அஞ்சலை (90). முதலைமேடு திட்டு கிராமத்தில் வசிக்கும்  தனது மகளுடன் இருக்கிறார். அதில் ஏதோ மனவருத்தம் ஏற்பட்டதால்  மூதாட்டி அஞ்சலை இன்று காலை ஆட்டோ பிடித்து  கொள்ளிடம் வந்திருக்கிறார்.  அப்படியே ஆற்று பக்கம் போனவர்  பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இதனை கண்ட அப்பகுதி மீனவர் சேகர் துரிதமாக ஆற்றில் குதித்து நீந்திபோய் மூதாட்டியை ஆற்றில் முழுகாமல் காப்பாற்றினார்.  அதே நேரம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் தனஜெயன் கரையில் இருந்த படகை எடுத்துக் கொண்டு மூதாட்டியை நோக்கி சென்றார். அதுவரை மூதாட்டியை பாதுகாப்பாக வைத்திருந்த  மீனவர் சேகர்,  காவலர்  அருகில் வந்ததும் அவரது  உதவியுடன் படகில் ஏற்றி  கரைக்கு கொண்டு வந்தனர். அதன் பின்னர்  மூதாட்டியின்   உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வரவழைக்கப்பட்டு  அவர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார். 

மூதாட்டி தற்கொலைக்கு முயன்றபோது துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய  மீனவர் மற்றும் காவலர் குறித்த புகைப்படங்களும், தகவல்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இருவருக்கும் பாராட்டுகளுக்கும் குவிந்து வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in