காதலுக்கு இருவீட்டிலும் எதிர்ப்பு: தொழுவத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த வாலிபர்

காதலை ஏற்காத குடும்பம்: விபரீத முடிவு எடுத்த இளைஞர்!
காதலை ஏற்காத குடும்பம்: விபரீத முடிவு எடுத்த இளைஞர்! காதலுக்கு இருவீட்டிலும் எதிர்ப்பு: தொழுவத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த வாலிபர்

தன் காதலை பெற்றோரும், காதலி வீட்டிலும் ஏற்றுக் கொள்ளாததால் மனமுடைந்து வாலிபர் மாட்டுத்தொழுவத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தென்காசி மாவடடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம், பெத்தநாடார்பட்டி காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் சேர்மன்(25). கட்டிடத் தொழிலாளியான இவர் அண்மைக்காலமாக சாலைகளில் அலங்காரத் தடை ஓடுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார். இவர் வேலைக்குச் சென்ற இடத்தில், பாவூர்சத்திரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து வந்தார். அந்த பெண்ணும், சேர்மனைக் காதலித்து வந்தார்.

சேர்மன் அந்த பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகத் தன் வீட்டில் சொல்லியுள்ளார். ஆனால் அதற்கு அவரது வீட்டில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதேபோல் தன் காதலி வீட்டிலும் போய் சேர்மன், தங்களுக்குத் திருமணம் நடத்தி வைக்குமாறு கேட்டார். ஆனால் அவர்களும் சம்மதிக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த சேர்மன், தன் வீட்டு மாட்டுத் தொழுவத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடம் வந்த பாவூர்சத்திரம் போலீஸார் அவரது உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

காதலி சம்மதித்தும், காதலுக்கு இரு வீட்டார் சம்மதிக்காததால் வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in