தோஷம் கழிப்பதாக தண்ணீரைத் தெளித்து மயங்க வைத்த போலி சாமியார்: 14 ஆயிரத்துடன் எஸ்கேப்

திருட்டில் ஈடுபட்ட போலி சாமியார்.
திருட்டில் ஈடுபட்ட போலி சாமியார்.தோஷம் கழிப்பதாக தண்ணீரைத் தெளித்து மயங்க வைத்த போலி சாமியார்: பறிபோன ரூ.14 ஆயிரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோஷம் கழிப்பதாகக்கூறி போலி சாமியார் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் நேசமணிநகர், நெசவாளர் காலனி பகுதியில் காவி உடை அணிந்த நபர் ஒருவர் வலம்வந்தார். அவர் அப்பகுதியில் இருந்த சில வீடுகளுக்குப் போய் தோஷம் கழிப்பதாகச் சொல்லி அனுமதி கேட்டார். காவி உடையில் இருந்த அவரை அப்பகுதிவாசிகள் சிலர் நம்பினர். அவரும் சில வீடுகளுக்கு போய் பூஜை செய்தார். அப்போது தான் கையில் வைத்திருந்த கமண்டலத்தில் இருந்து நீரை எடுத்து ஒரு வீட்டில் இருந்தவர் மீது தெளித்தார். அவர் அதில் மயங்கினார்.

சிறிதுநேரத்தில் அவர் கண் விழித்துப் பார்த்தபோது, அவரது பீரோவில் இருந்த 14 ஆயிரம் ரூபாய் மாயமாகி இருந்தது. அவர் வாசலில் வந்து பார்த்தபோது சாமியார் வேடத்தில் இருந்தவர் மாயமாகி இருந்தார். இதுகுறித்து நேசமணிநகர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி சாமியாரின் படத்தையும் வெளியிட்டுள்ளனர். மேலும் நேசமணிநகர் பகுதியில் வேறு யாரும் இதேபோல் ஏமாற்றப்பட்டு உள்ளனரா எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in