வகுப்பறையில் அத்துமீறல்; ஆசிரியைக்கு கன்னத்தில் பளார்: போதை நபரால் பதறிய மாணவர்கள்

வகுப்பறையில் அத்துமீறல்; ஆசிரியைக்கு கன்னத்தில் பளார்:  போதை நபரால் பதறிய மாணவர்கள்

புதுக்கோட்டையில் அரசு பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையின் கன்னத்தில் அறைந்த போதை ஆசாமியை போலீஸார் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள மாருதி நகரைச் சேர்ந்தவர் ஆசிரியை சித்ரா தேவி. இவர் ஆலங்குடி அருகே உள்ள கன்னியான்கொல்லை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

சித்ரா தேவி வழக்கம் போல் பள்ளி வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, மது போதையில் வாணக்கன்காட்டைச் சேர்ந்த சித்திரைவேல் என்பவர் வகுப்பறைக்குள் அத்துமீறி நுழைந்தார். அத்துடன், ஆசிரியை சித்ரா தேவியை கன்னத்தில் அறைந்ததோடு, கொலை மிரட்டல் விடுத்தார். இந்த சம்பவத்தால் வகுப்பறையில் இருந்த மாணவர்கள் பதறித்துடித்தனர்.

அப்போது அங்கிருந்த மற்றவர்கள், சித்திரவேலை குண்டுக்கட்டாக தூக்கி வெளியே அனுப்பினர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், சித்திரைவேலுவைத் தேடி வருகின்றனர். ஆசிரியையை போதை ஆசாமி தாக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in