மாணவர்கள் மடியில் அமர்ந்து நூதனப் போராட்டம்: கேரள மாணவிகள் அதிரடி!

மாணவர்கள் மடியில் அமர்ந்து நூதனப் போராட்டம்: கேரள மாணவிகள் அதிரடி!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மாணவர்கள் மடியில் அமர்ந்தும், மிக நெருக்கமாகவும் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சுவாரஸ்ய சம்பவம் இன்று காலையில் நடைபெற்றது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சிடி பொறியியல் கல்லூரி என்னும் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியின் அருகிலேயே பயணிகள் நிழற்குடை ஒன்று உள்ளது. இங்கு அந்தக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் மிக நெருக்கமாக இருந்து வெகுநேரம் பேசுவதாக சர்ச்சை எழுந்தது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மர்மநபர் ஒருவர் நேற்று இரவோடு, இரவாக இந்த பயணிகள் நிழற்குடையை இடித்தார்.

நட்பு அடிப்படையில் சக தோழிகளுடன் பேசுவதைப் பிடிக்காத யாரோ சிலர் இப்படிச் செய்ததைப் பார்த்து காலையில் கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே இடித்து அகற்றிய செங்கல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதைப் பார்த்தனர். அவற்றை எடுத்து அடுக்கி வைத்து முன்னைவிட மிக நெருக்கமாகவும், சக தோழிகளை மடியில் தூக்கிவைத்துக்கொண்டும் அமர்ந்தனர்.

நிழற்குடையை இடித்த சமூகவிரோதிகளுக்கு பாடம் புகட்டவே இப்படிச் செய்ததாக மாணவர்கள் தரப்பில் விளக்கம் கொடுத்துள்ளனர். இந்த நூதனப் போராட்ட புகைப்படங்கள் கேரளத்தில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in