இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுகிறது: இந்திய வானிலை ஆய்வு மையம்

இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுகிறது: இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த மாதம் ஐந்தாம் தேதியன்று தெற்கு அந்தமான்  கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தீவிரமடைந்து மேன்டூஸ் புயலாக உருவெடுத்து தமிழகத்துக்கு  பெரும் மழை கிடைக்க காரணமாக  அமைந்திருந்தது.  அது கடந்த 10-ம் தேதியன்று கரையேறிய பிறகும் தமிழ்நாட்டின் பல இடங்களில் கன மழையை கொடுத்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மீண்டும் ஒரு  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அது இன்றைக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறினாலும் அது புயலாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் இல்லை என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.  அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் எதிர்வரும் 18,19, 20 தேதிகளில் நல்ல மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in