நண்பர்கள் கண்முன்னே மாணவனை இழுத்துச் சென்ற முதலை: குளித்தப்போது நடந்த பயங்கரம்

நண்பர்கள் கண்முன்னே மாணவனை இழுத்துச் சென்ற முதலை: குளித்தப்போது நடந்த பயங்கரம்

சிதம்பரம் அருகே குளிக்க சென்ற ஐடிஐ மாணவரை முதலை இழுத்துச் சென்று தாக்கியதில்  பரிதாபமாக உயிரிழந்துள்ள  சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உயிரிழந்த மாணவன் திருமலை
உயிரிழந்த மாணவன் திருமலை

சிதம்பரம் அருகே வேளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலை(18). இவர் சிதம்பரத்தில் உள்ள அரசு ஐடிஐ-யில் படித்து வந்தார். இன்று மாலை அதே ஊரைச் சேர்ந்த நண்பர்கள் விஷ்ணு, பழனி ஆகியோருடன் அங்குள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் குளித்துக் கொண்டிருக்கும்போது ஆற்றுக்குள் ஏதோ சத்தம் கேட்டுள்ளது. இப்பகுதியில் அதிகம் முதலைகள்  இருப்பதால் உடனடியாக இதனை கண்டதும் அனைவரும் விறுவிறு என கரைக்கு வந்துள்ளனர். 

அப்போது இவர்கள் குளிக்க பயன்படுத்திய சோப்பு ஆற்றின் கரையோரத்தில் விழுந்துள்ளது. இதனை திருமலை எடுக்க முயற்சித்தபோது ஆற்றில் இருந்த முதலை திருமலையின் காலை பிடித்து இழுத்துச் சென்றுள்ளது. பின்னர் அங்கிருந்த இவரது நண்பர்கள் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் முதலையை சத்தமிட்டு விரட்டியுள்ளனர். ஆனாலும் முதலை திருமலையை விடாமல் ஆற்றுக்குள் இழுத்துச் சென்றது. அதனால் உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு துறையினர், வனத்துறையினர், காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் பழைய கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து திருமலையை தேடி வந்த நிலையில் 2 மணி நேரத்திற்கு பிறகு அவரது உடல் ஒரு புதரில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, திருமலையின் உடலை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் சிதம்பரம் உதவி ஆட்சியை ஸ்வேதா சுமன், சிதம்பரம் காவல் உதவி கண்காணிப்பாளர் ரகுபதி, வட்டாட்சியர் ஹரிதாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இப்பகுதியில் தொடர்ந்து முதலை தாக்குதலாக உடல் உறுப்புகளை இழந்தவர்கள், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in