கட்டுவிரியன் பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த கட்டுமானத் தொழிலாளி: மருத்துவர், ஊழியர்கள் அதிர்ச்சி

கட்டுவிரியன் பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த கட்டுமானத் தொழிலாளி: மருத்துவர், ஊழியர்கள் அதிர்ச்சி

தேனி மாவட்டத்தில் தன்னைக் கடித்த பாம்பை கேரிபேக்கில் போட்டுக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு வந்துசேர்ந்த கட்டுமானத் தொழிலாளியால் மருத்துவமனை வட்டாரமே பரபரப்பானது.

தேனி மாவட்டம், மல்லிகாபுரத்தைச் சேர்ந்தவர் விவேக்(25). கட்டுமானத் தொழிலாளியான இவர் கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் வேலை செய்துவருகிறார். இவர் இன்று காலையில் திருக்கோட்டை என்னும் பகுதியில் கம்பி கட்டும் பணியில் இருந்தார். அப்போது சிமெண்ட் கற்களை அவர் அகற்றிக் கொண்டு இருந்தபோது, அதனுள் இருந்து சீறிபாய்ந்து வந்த பாம்பு ஒன்று விவேக்கின் வலது கையில் கொத்தியது.

அதேநேரத்தில் விவேக் தன்னை கடித்த பாம்பை பிடிக்கச் சொன்னார். உடனே சகபணியாளர்கள் சேர்ந்து அந்த பாம்பைப் பிடித்து ஒரு கேரிபேக்கில் போட்டுக்கொண்டு, விவேக்கையும் போடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதைப்பார்த்து அங்கிருந்த மருத்துவர், ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அங்கு விவேக்கிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தன்னைக் கடித்த பாம்பு பற்றி மருத்துவருக்குத் தெரிவிக்க அதை கேரிபேக்கில் போட்டு எடுத்துவந்ததாக விவேக் தெரிவித்தார். மருத்துவர்கள் பார்த்ததில், அது கொடிய நச்சுத்தன்மை கொண்ட கட்டுவிரியன் பாம்பு எனவும் தெரியவந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in