பொது இடங்களில் குப்பைக் கொட்டினால் போலீஸில் புகார் அளிக்கப்படும்: சென்னை மாநகராட்சி அதிரடி

சாலைகளில் குப்பை
சாலைகளில் குப்பைபொது இடங்களில் குப்பைக் கொட்டினால் போலீஸில் புகார் மற்றும் அபராதம் - சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னையில் உள்ள சாலையில் கழிவுகள் கொட்டிய நபர்களுக்கு ரூ.30,000 அபராதமும் 15 நபர்கள் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’சென்னை மாநகராட்சிக்குட்பட்ட15 மண்டலங்களில் நாள்தோறும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. திடக்கழிவுகளைக் கையாள மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் பொதுமக்கள் திடக்கழிவுகளை சாலையில் கொட்டி சுகாதாரச் சீர்கேட்டை உருவாக்குகின்றனர்.

இதன் காரணமாக சென்னை மாநகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில் கள ஆய்வு செய்த போது ராயபுரம் பகுதிகளில் திடக்கழிவுகளை சாலையில் கொட்டிய நபருக்கு ரூ.30,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல கட்டிடக்கழிவுகளைக் கொட்டியவர்களுக்கு ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும் சாலையில் குப்பையை கொட்டிய 15 நபர்கள் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் திடக்கழிவுகள், குப்பைகள் கொட்டுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் போலீஸில் புகார் அளித்து குப்பை கொட்டும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in