வீட்டு வேலை செய்யாமல் இருக்கிறாயே: தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை

கல்லூரி மாணவி தற்கொலை
கல்லூரி மாணவி தற்கொலைதாய் கண்டித்ததால் தற்கொலை செய்துக் கொண்ட கல்லூரி மாணவி!

செங்கல்பட்டில் வீட்டு வேலைகளை சரிவர செய்யாத மகளைத் தாய் கண்டித்ததால் கொக்கு மாத்திரையை சாப்பிட்டு மகள் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு அருகே வடகால் கிராமத்தைச் சேர்ந்த சேகரின் மகள் ஹரிணி (19). சென்னை குரோம்பேட்டையில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். இந்த நிலையில் தாய் அமலம்மாள் வீட்டு வேலை ஒழுங்காக செய்யாததால் மகளை கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த கல்லூரி மாணவி ஹரிணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கொக்கு பிடிக்க பயன்படுத்தப்படும் மருந்தான பியூரிட்டானை குடித்து வாந்தி எடுத்துள்ளார். ஹரிணி வாந்தி எடுப்பதை பார்த்த பக்கத்து வீட்டில் வசிக்கும் பெரியப்பா மகன் கார்த்தி அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

இந்த தற்கொலை சம்பந்தமாக செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவி விஷம் குறித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அந்தப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in