9-ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்ட முயன்ற 11-ம் வகுப்பு மாணவன்: அதிர வைத்த அடுத்த சம்பவம்

9-ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்ட முயன்ற 11-ம் வகுப்பு மாணவன்: அதிர வைத்த அடுத்த சம்பவம்

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பிளஸ் 2 மாணவிக்கு தாலிகட்ட முயன்ற பாலிடெக்னிக் மாணவரின் வீடியோ வைரலானது. இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே நெல்லை மாவட்டத்தில் 9-ம் வகுப்பு மாணவிக்கு, 11/ம் வகுப்பு மாணவன் தாலிகட்ட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர், தன் அருகாமை பள்ளிக்கூடத்தில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாகக் காதலித்து வந்தார். ஆனால் அந்த மாணவி காதலுக்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்துவந்தார். இந்நிலையில் அந்த மாணவி பள்ளியை விட்டு வெளியே வரும்போது திடீர் எனத் தாலிகட்ட முயன்றார் மாணவர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி சப்தம் போடவும், அதற்குப் பயந்து மாணவர் தப்பியோடி விட்டார்.

இதுகுறித்து சேரன்மகாதேவி போலீஸாருக்குத் தெரியவந்தது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் மாணவன் தாலிகட்ட வரும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து போலீஸார் அந்த மாணவனையும், அவரது பெற்றோரையும் காவல் நிலையம் வரவழைத்து, அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தனர்.. இச்சம்பவம் அந்த சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in