பயிருக்கு மருந்து தெளிக்கச்சென்ற தந்தை; பூச்சிமருந்து டப்பாவில் தண்ணீர் ஊற்றி குடித்த 3 வயது மகள்: தோட்டத்தில் நடந்த விபரீதம்

பயிருக்கு மருந்து தெளிக்கச்சென்ற தந்தை; பூச்சிமருந்து டப்பாவில் தண்ணீர் ஊற்றி குடித்த 3 வயது மகள்: தோட்டத்தில் நடந்த விபரீதம்

தன் அப்பாவுடன் தோட்டத்திற்கு சென்றக் குழந்தை தவறுதலாக பூச்சி மருந்தைக் குடித்து பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி அருகில் உள்ள அரசகுலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு(33). இவரது மூன்று வயதில் சஞ்சனா. விவசாயியான ராமசாமி தன் தோட்டத்தில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்தினைத் தெளிக்க தன் மனைவி மற்றும் மகள் சஞ்சனாவுடன் சென்றார். பூச்சிக்கொல்லி மருந்தில் தண்ணீர் சேர்த்து ஸ்பிரேயரில் ஏற்றி முதுகில் கட்டிக்கொண்டு ராமு பயிர்களுக்கு தெளிக்கச் சென்றார். பூச்சிக்கொல்லி மருந்தின் காலி டப்பாவை தோட்டத்திலேயே போட்டுவிட்டுச் சென்றார்.

இதைப் பார்த்த மூன்று வயது சிறுமி சஞ்சனா அந்த காலி டப்பாவை எடுத்து அதில் தண்ணீர் விட்டுக் குடித்திருக்கிறார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சஞ்சனா போராடினார். ராமு தன் மகளை உடனடியாக மீட்டு காரியாப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை சஞ்சனா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். தோட்டத்திற்கு குழந்தையை அழைத்துச் சென்று அலட்சியத்தில் குழந்தை உயர் இழந்த சம்பவம் அப்பகுதிவாசிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in