டூத் பேஸ்ட் என நினைத்து எலிபேஸ்டை சாப்பிட்ட 3 வயது குழந்தை பலி

டூத் பேஸ்ட் என நினைத்து எலிபேஸ்டை சாப்பிட்ட 3 வயது குழந்தை பலி

சேலம் மாவட்டத்தில், டூத்பேஸ்ட் என நினைத்து எலி பேஸ்டை சாப்பிட்டக் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், முயல்கரட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(34). இவர் தம்மம்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலைசெய்து வருகிறார். இவருக்கு 3 வயதில் வேம்பரசி என்னும் பெண் குழந்தை இருந்தது. கடந்த 19-ம் தேதி வீட்டில் இருந்தபோது வேம்பரசி பல் தேய்க்கும் டூத் பேஸ்டு என நினைத்து, எலித்தொல்லைக்கு வைக்கும் எலி பேஸ்டை எடுத்து சாப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மயங்கிய தன் மகளை செந்தில்குமார் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு குழந்தை வேம்பரசி மாற்றப்பட்டது. அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வேம்பரசி நேற்று நள்ளிரவு உயிர் இழந்தார். குழந்தையின் மரணம் தொடர்பாக தம்மம்பட்டி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். மூன்று வயதுக் குழந்தை டூத் பேஸ்ட் என நினைத்து, எலிபேஸ்டை சாப்பிட்ட சம்பவம் அந்த கிராம மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in