பிறந்து 2 நாளேயான பெண் குழந்தை மழைநீர் கால்வாயில் வீச்சு: 'பாசக்காரத்தாயை' தேடும் போலீஸ்

பிறந்து 2 நாளேயான பெண் குழந்தை மழைநீர் கால்வாயில் வீச்சு: 'பாசக்காரத்தாயை' தேடும் போலீஸ்

மானாமதுரையில் பிறந்து 2 நாட்களேயான பெண் குழந்தை மழைநீர் கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் மருது பாண்டியர்கள் குருபூஜை மற்றும் பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மானாமதுரை பைபாஸ் சாலை அருகே உள்ள ரயில்வே மேம்பாலம் பகுதியில் திருப்புவனம் போலீஸார் இன்று ரோந்து சென்றனர்.

அப்போது அங்குள்ள கல்லறைத் தோட்டம் பகுதியை ஒட்டியுள்ள மழைநீர் கால்வாய் சிமெண்ட் சிலாப்பு பகுதியில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதைக்கேட்ட ரோந்து போலீஸார் அப்பகுதியில் தேடினர். அப்போது மழைநீர் கால்வாயில் தண்ணீர் இல்லாத பகுதியில் பிறந்து இரண்டு நாட்களேயான பெண் குழந்தை கிடந்தது.

இதைக்கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். அக்கம் பக்கத்தில் குழந்தைக்குச் சொந்தமானவர்கள் யாரும் இருக்கிறார்களா என போலீஸார் தேடிப்பார்த்தனர். ஆனால், யாரையும் காணவில்லை. இதையடுத்து அந்த குழந்தையை மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்கைக்காக சேர்ந்தனர். மழைநீர் கால்வாயில் குழந்தையை வீசி விட்டுச் சென்ற பெண் யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in