காரில் கட்டப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட நாய்; மருத்துவரின் கொடூர செயல்: வைரலாகும் வீடியோ

காரில் கட்டப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட நாய்; மருத்துவரின் கொடூர செயல்: வைரலாகும் வீடியோ

தெரு நாய் ஒன்றை மருத்துவர் ஒருவர் தனது காரில் இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் ரஜ்னீஷ்
டாக்டர் ரஜ்னீஷ்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் மருத்துவர் ஒருவர் தனது காரில் நாயை கட்டிக்கொண்டு வேகமாக சென்றுக் கொண்டிருந்தார். அந்த நாய் அங்கும் இங்குமாக காரில் இழுத்து செல்லப்பட்டது. இதைப் பார்த்து வாகனத்தில் சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், இதை வீடியோவாக எடுத்துள்ளார். பின்னர் காரை வழிமறித்து நிறுத்திய அந்த வாலிபர், காரில் கட்டி இழுத்துச் செல்லப்பட்ட நாயை விடுவித்துள்ளார். பின்னர் அந்த நாயை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த அந்த வாலிபர், இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர், இது குறித்து டாக் ஹோம் என்ற அறக்கட்டளை சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் போரில் டாக்டர் மீது மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இது குறித்து அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஜோத்பூரைச் சேர்ந்த டாக்டர் ரஜ்னீஷ் என்பது தெரியவந்தது. அவரது வீட்டின் அருகே இந்த தெரு நாய் வசித்து வந்ததால் அங்கிருந்த வேறு இடத்துக்கு தனது காரில் கட்டி இழுத்துச் சென்றது தெரியவந்தது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in