சாதிப் பெயரைச் சொல்லி மிரட்டல்: கள்ளக்குறிச்சி பிஆர்ஓ மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு!

சாதிப் பெயரைச் சொல்லி மிரட்டல்: கள்ளக்குறிச்சி பிஆர்ஓ மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு!

கள்ளக்குறிச்சி மாவட்ட பிஆர்ஓ சரவணன் மீது செய்தியாளர் ஒருவரை  சாதி பெயரை சொல்லி திட்டியது மற்றும் கொலை செய்து விடுவதாக மிரட்டியது உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் மற்றும் செய்தி தொடர்பு துறை அலுவலராக பணியாற்றி வருபவர் சரவணன். இவர் செய்தியாளர்களிடம் பல்வேறு விஷயங்களில் பாரபட்சம் காட்டுவதாகவும் அதிகாரிகளை மிரட்டி பணம் பெற்று வருவதாகவும் ஏற்கெனவே புகார்கள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் தனக்கு இலவச பேருந்து பயணத்தை மற்றும் அரசு அடையாள அட்டை ஆகியவை வழங்குமாறு விண்ணப்பித்திருக்கிறார்.  மற்றவர்களுக்கு அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்ட நிலையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் உள்ளிட்ட சிலருக்கு  மட்டும் அது தரப்பட வில்லையாம்.

இதையடுத்து  அதுபற்றி  கேட்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செய்தியாளர் வந்திருக்கிறார்.  அப்போது அவரை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளியதோடு சாதி பெயரை சொல்லி அவமதித்து அடியாட்கள் மூலம் கொலை செய்து விடுவதாக சரவணன் மிரட்டியதாக  கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் செய்தியாளர் புகார் அளித்தார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட கள்ளக்குறிச்சி காவல் நிலைய போலீஸார் புகாரில் உண்மைத்தன்மை இருந்ததையடுத்து  பிஆர்ஓ சரவணன் மீது சாதி பெயரை சொல்லி திட்டிய வன்கொடுமை  தடுப்புச் சட்டம் மற்றும் கொலை மிரட்டல்  உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிஆர்ஓ  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in