மகளை சித்ரவதை செய்த தாய்; புகார் அளித்த அக்கம், பக்கத்தினர்: அதிரடி காட்டியது போலீஸ்

மகளை சித்ரவதை செய்த தாய்; புகார் அளித்த அக்கம், பக்கத்தினர்: அதிரடி காட்டியது போலீஸ்

குமரி மாவட்டத்தில் தன் சொந்த மகளுக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த தாய் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், பிள்ளைத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மரிய ரூபன். வெளிநாட்டில் வேலைசெய்து வருகிறார். இவரது மனைவி ஆரோக்கிய ஆஸ்மி. இந்தத் தம்பதியினருக்கு 6-ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். ஆரோக்கிய ஆஸ்மி தன் மகளை மித மிஞ்சிய வேலை செய்ய வைப்பதோடு, தலையில் சூடு வைப்பது, கொடூரமாக அடிப்பது ஆகிய செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் அந்த சிறுமிக்கு தலையில் பலத்த அடி பட்டி, கட்டும் போட்டுள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் அக்கம், பக்கத்தினர் குழந்தைகள் நல அலுவலர்களிடம் புகார் கொடுத்தனர். குழந்தைகள் நலக்குழும அதிகாரிகள் இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீஸார் ஆரோக்கிய ஆஸ்மியின் வீட்டிற்குப் போய், அவரது மகளை மீட்டனர். மேலும் சிறுமியை உடல், மன ரீதியாகத் துன்புறுத்திய அவரது தாய் ஆரோக்கிய ஆஸ்மி மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். சிறுமி இப்போது காப்பகம் ஒன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்துத் தெரியவந்ததும் வெளிநாட்டில் இருக்கும் சிறுமியின் தந்தை மரிய ரூபனும் ஊர் திருப்புகிறார். பெற்ற குழந்தையைத் தாக்கிய தாய்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in