நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை குடியரசு தலைவர் திறக்கக்கோரிய வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டிடத்தில் பிரதமர் மோடி
நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டிடத்தில் பிரதமர் மோடிநாடாளுமன்ற புதிய கட்டிடத்தை குடியரசு தலைவர் திறக்கக்கோரிய வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

வரும் 28-ம் தேதி நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் திறக்கப்பட உள்ள நிலையில் இதை ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் தற்போது இருக்கும் நாடாளுமன்றக் கட்டிடம் 96 ஆண்டுகள் பழமையானது. இதனால் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டத் தீர்மானிக்கப்பட்டது. 850 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்திற்கு கடந்த 2010-ம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார். இப்பணிகள் முடிந்த நிலையில், வரும் 28-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்தக் கட்டிடத்தைத் திறந்து வைக்கிறார்.

ஆனால், ஜனாதிபதி தான் இந்த கட்டிடத்தைத் திறந்து வைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் கூட்டாக வலியுறுத்தின. ஆனால், அரசு அதைப் பொருட்படுத்தப்படவில்லை. அதனால் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட 19 எதிர்கட்சிகள் நாடாளுமன்ற புதிய கட்டிடத் திறப்புவிழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 79-வது பிரிவு நாடாளுமன்றம் என்பது இரு அவை, குடியரத் தலைவரை உள்ளடக்கியது எனக் கூறப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரே நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் படைத்தவர். பிரதமரையும், அமைச்சர்களையும் நியமிப்பதுடன் மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளும் ஜனாதிபதி பெயரிலேயே எடுக்கப்படுகின்றன. அதனால் ஜனாதிபதியை வைத்து புது நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறக்க மக்களவை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்.”எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நரசிம்மா, மகேஸ்வரி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in