'என் மனைவியை விவகாரத்து செய்துட்டேன்': நம்பிய ஆசிரியையை பலாத்காரம் செய்த தொழிலதிபர்!

பலாத்காரம் செய்த தொழிலதிபர் மீது வழக்கு
பலாத்காரம் செய்த தொழிலதிபர் மீது வழக்கு'என் மனைவியை விவகாரத்து செய்துட்டேன்': நம்பிய ஆசிரியையை பலாத்காரம் செய்த தொழிலதிபர்!

கோவையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசிரியையை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலதிபர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கோட்டைமேட்டைச் சேர்ந்தவர் 37 வயது பெண். இவருக்கு திருமணமாகவில்லை. பெற்றோருடன் வசிக்கும் இவர், வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் அவருடன் பள்ளியில் பணியாற்றும் சரவணம்பட்டியைச் சேர்ந்த சக ஆசிரியை ஒருவர் மூலமாக வடவள்ளியைச் சேர்ந்த 42 வயது தொழில் அதிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

அவர்கள் இருவரும் ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்தனர். அப்போது ஆசிரியைக்கு திருமணம் ஆகவில்லை என்பதை தொழிலதிபர் தெரிந்து கொண்டு, மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக ஆசிரியையிடம் கூறியுள்ளார். இதையடுத்து ஒருநாள் அவர் மருதமலை ரோட்டில் உள்ள ஒரு வீட்டிற்கு அந்த பெண்ணை அழைத்துச்சென்று, திருமணம் செய்வதாக உறுதியளித்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் ஆசிரியையிடம் இருந்து பல்வேறு காலங்களில் ரூ.25 லட்சம் பணத்தை தொழிலதிபர் பெற்றுள்ளார். இதன் பின்னர் ஆசிரியையை திருமணம் செய்யாமலும், பணத்தைத் திருப்பி தராமலும் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தொழில் அதிபரிடம் பணத்தைத் திரும்ப கேட்டபோது, ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது . இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியை புகார் செய்தார். இதன்பேரில், பாலியல் பலாத்காரம், மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தொழிலதிபர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in