கல்வெட்டில் மோதி கால்வாய்க்குள் பாய்ந்த கார்: நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி


கல்வெட்டில் மோதி கால்வாய்க்குள் பாய்ந்த கார்: நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

தெலங்கானாவில் கல்வெட்டில் மோதி கால்வாயில் கார் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெலங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டத்தில் உள்ள முனிகடப்பாவில் இன்று மாலை கார் வந்து கொண்டிருந்தது. கோயிலுக்குச் சென்று விட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், வெமுலவாடாவில் இருந்து பீபி நகருக்கு அந்த காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது முனிகடப்பாவில் சாலையில் இருந்த கல்வெட்டில் கார் மோதி கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அந்த கார் அருகில் இருந்த கால்வாய்க்குள் பாய்ந்தது. இந்த கால்வாயில் தண்ணீர் குறைந்த அளவு இருந்தாலும், காரில் இருந்த 6 பேரும் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் உடனடியாக காவல் துறைக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். மண் அள்ளும் இயந்திரம் மூலம் காரை தீயணைப்புத்துறையினர் கால்வாயில் இருந்து மீட்டனர். காரில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in