மின்னல் வேகத்தில் வந்த கார்; சாலையில் தூக்கி வீசப்பட்ட போலீஸ்காரர்கள்: பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

சாலையில் தூக்கி வீசப்பட்ட போலீஸ்காரர்கள்
சாலையில் தூக்கி வீசப்பட்ட போலீஸ்காரர்கள்மின்னல் வேகத்தில் வந்த கார்; சாலையில் தூக்கி வீசப்பட்ட போலீஸ்காரர்கள்: பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர்கள் 2 பேர் மீது கார் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி நெஞ்சை பதை பதைக்க வைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சிவனைந்தபுரம் விளக்கில் மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறை சோதனை சாவடி செயல்பட்டு வருகிறது. இன்று சோதனை சாவடியில் காவலர்கள் மாரீஸ்வரன்(32), வீரசிங்கம்(39) உள்ளிட்ட நான்கு பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருநெல்வேலியிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் அதிவேகமாக காவலர்கள் மீது மோதியதில் மாரீஸ்வரன் மற்றும் வீரசிங்கம் ஆகிய காவலர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காரை ஓட்டி வந்த மூலக்கரைபட்டியை சேர்ந்த சேர்ந்த முத்துக்குமார்(50) கைது செய்யப்பட்டார். காரை ஒட்டி வந்த முத்துக்குமார் அதிக அளவு மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி நெஞ்சை பதை பதைக்க வைத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in