மின்னல் வேகத்தில் வந்த கார்; தூக்கி வீசப்பட்ட தம்பதி: பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

மின்னல் வேகத்தில் வந்த கார்; தூக்கி வீசப்பட்ட தம்பதி: பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

பல்லடம் அருகே மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று இரண்டு இரு சக்கரங்கள் வாகனம் மீது மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி பதை பதைக்க வைத்திருக்கிறது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம்- தாராபுரம் சாலையில் வலையபாளையத்தை சேர்ந்த செந்தில் என்பவர் தனது மனைவி சாந்தாமணியுடன் சக்கர வாகனத்தில் பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தார். தண்ணீர் பந்தல் எந்த இடத்தில் செந்தில் பைகில் வந்தபோது எதிரே மின்னல் வேகத்தில் வந்த கார் இவர்கள் மீது மோதியது. இதில் இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டனர். கார் நிற்காமல் மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கட்டுப்பட்டை இழந்த கார் பல்டி அடுத்து சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் ஓடோடி சென்று அடிபட்டவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காமநாயக்கன்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதிய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி நெஞ்சை பதை பதைக்க வைத்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in