அதிகாலையில் திடீரென பற்றி எரிந்த கார்கள்; பதறி ஓடி வந்த உரிமையாளர்: சென்னையில் பயங்கரம்

அதிகாலையில் திடீரென பற்றி எரிந்த கார்கள்; பதறி ஓடி வந்த உரிமையாளர்: சென்னையில் பயங்கரம்

சென்னையில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள் அதிகாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை பழவந்தாங்கலில் வசித்து வந்த ஒருவர் தனது வீட்டு முன்பு இரண்டு கார்களை நிறுத்தி தூங்கச் சென்றுள்ளார் இந்த நிலையில் அதிகாலையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டு இருந்த இரண்டு கார்கள் திடீரென தீப்பிடித்து இருந்தன. இதனை பார்த்து ஓடி வந்த காரின் உரிமையாளர் தீயை அணைக்க முயன்றார். தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அவரால் தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து திருவான்மியூர், கிண்டி பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் இரண்டு வாகனங்களில் விரைந்து வந்து சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் இரண்டு கார்களும் எரிந்து நாசமானது. அதிகாலை நேரம் என்பதால் அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லை. இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், இது விபத்தா அல்லது யாராவது தீ வைத்து எரித்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகாலை நேரத்தில் இரண்டு கார்கள் திடீரென பற்றி எரிந்த சம்பவம் பழவந்தாங்கல் பகுதியில் வரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in