கம்மலுக்காக மூதாட்டியின் காதை அறுத்துச் சென்ற கொள்ளையன்: தூத்துக்குடியில் நடந்த கொடூரம்

கம்மலுக்காக மூதாட்டியின் காதை அறுத்துச் சென்ற கொள்ளையன்: தூத்துக்குடியில் நடந்த கொடூரம்

தூத்துக்குடியில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன் தனிமையில் இருந்த மூதாட்டியின் காதில் கிடந்த கம்மலுக்காக காதையே அறுத்துச் சென்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.

தூத்துக்குடி முள்ளக்காடு வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராசம்மாள். 81 வயதான மூதாட்டி, ஏற்கெனவே கணவர் இறந்துவிட்ட நிலையில் தனிமையில் வாழ்ந்து வந்தார். பாட்டி ராசம்மாள் வீட்டில் தனிமையில் இருப்பதை நோட்டமிட்ட கொள்ளையன் நேற்று நள்ளிரவு பாட்டியின் வீட்டிற்குள் புகுந்தார். அருகில் இருந்த செங்கலால் பாட்டியின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் பாட்டி மயங்கி விழுந்தார். அப்போது ராசம்மாள் அணிந்து இருந்த 2 பவுன் தங்கச் செயினை திருடினார். தொடர்ந்து அவர் காதில் கம்மல் கிடப்பதைப் பார்த்தார். அதைக் கழட்ட முடியாமல் ராசம்மாளின் காதின் ஒருபகுதியை அறுத்து இரு கம்மலையும் திருடினார். தொடர்ந்து பாட்டியின் செல்போனையும் பறித்துக்கொண்டு சென்றுவிட்டார்.

வழக்கமாக காலையில் வீட்டு நடையை தெளித்து கோலமிடும் ராசம்மாள் இன்று வராததால் அக்கம், பக்கத்தினர் வீட்டில் போய் பார்த்தனர். அப்போது ராசம்மாள் ரத்தம் வடிய மயங்கிக் கிடந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்தச் சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in