வாடகை வீட்டில் 16 வயது சிறுமியை வைத்து பாலியல் தொழில்: கணவன், மனைவி உட்பட 14 பேர் சிக்கினர்!

வாடகை வீட்டில் 16 வயது சிறுமியை வைத்து பாலியல் தொழில்: கணவன், மனைவி உட்பட 14 பேர் சிக்கினர்!

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த வடலூரை சேர்ந்த புரோக்கர் உட்பட 27 பேரை கைது செய்துள்ளது புதுச்சேரி மாநில காவல்துறை.

கடலூர் மாவட்டம், வடலூரைச் சேர்ந்தவர் பால்ராஜ் என்ற பாலாஜி. இவர் புதுச்சேரி கோரிமேடு மோகன் நகரில் வீடு ஒன்றை  வாடகைக்கு எடுத்து அங்கே கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை வைத்து பாலியல் தொழில்  செய்து வந்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதற்கு பாலாஜியின் மனைவி உமாவும் உடந்தையாக  அதே வீட்டில் இருந்திருக்கிறார்.  இதனையடுத்து  புதுச்சேரி வடக்கு குற்றப்பிரிவு போலீஸார் இதுகுறித்து  ரகசிய விசாரணை நடத்தினர். இதில் ஒரு கும்பலே செயல்பட்டு வருவது தெரிய வந்தது.

இது தொடர்புடைய பாலாஜி, அவரது மனைவி உமா உள்ளிட்ட 14 பேரை  முதல் கட்டமாக கைது செய்த குற்றப்பிரிவு போலீஸார்  தன்வந்திரி காவல் நிலையத்தில் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மேலும் பலருக்கு நேரடியாகவும்,  மறைமுகமாகவும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அனைவரையும் போக்சோ  சட்டத்தில் கைது செய்ய போலீஸார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.  மொத்தம் 27 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இப்படி வீடு வாடகைக்கு எடுத்து சிறுமியை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தி வந்திருப்பது பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in