இளம்பெண் இருக்கையில் சிறுநீர் கழித்த வாலிபர்: கர்நாடகா அரசு பஸ்சில் களேபரம்!

கேஎஸ்ஆர்டிசி  பேருந்துகள்.
கேஎஸ்ஆர்டிசி பேருந்துகள்.இளம்பெண் இருக்கையில் சிறுநீர் கழித்த பயணி: கர்நாடகா அரசு பஸ்சில் களேபரம்!

கர்நாடகா அரசு பேருந்தில் தனது அருகில் அமர்ந்திருந்த இளம்பெண் இருக்கையில் வாலிபர் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (கேஎஸ்ஆர்டிசி) இயக்கும் பேருந்தில் 32 வயது வாலிபர் பயணம் செய்தார். அவரது இருக்கைக்கு அருகில் 20 வயது இளம்பெண் அமர்ந்திருந்தார். விஜயபுராவில் இருந்து மங்களூருக்கு அந்த பேருந்து சென்று கொண்டது. ஹீப்பள்ளிக்கு அருகே கீரேசூரில் ஒரு தாபாவில் இரவு உணவிற்காக பேருந்து நிறுத்தப்பட்டது.

இளம்பெண் உணவு சாப்பிடுவதற்காக தாபாவிற்கு சென்றுள்ளார். அப்போது பேருந்தில் அவர் அருகில் அமர்ந்திருந்த வாலிபர், இளம்பெண்ணின் இருக்கையில் சிறுநீர் கழித்தார். தாபாவில் சாப்பிட்டு விட்டு பேருந்துக்கு வந்த இளம்பெண், தன் இருக்கையில் சகபயணி சிறுநீர் கழிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் சத்தம் போடவும், பேருந்து ஓட்டுநர், நடத்துநர், பயணிகள் என்ன விவரம் என்று அறிந்த போது அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அந்த வாலிபரிடம் கேட்டதற்கு ஓட்டுநர், நடத்துநர், இளம்பெண், பயணிகளிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அந்த வாலிபர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை பேருந்தில் இருந்து இறக்கி விடவேண்டும் என்று மற்ற பயணிகள் வலியுறுத்தினர். இந்த சம்பவம் குறித்து கேஆர்டிசியின் பிரிவு கட்டுப்பாட்டாளர் ராஜேஷ் ஷெட்டியின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து இளம்பெண்ணின் இருக்கை உடனடியாக பேருந்து பணியாளர்களால் சுத்தம் செய்யப்பட்டது. அத்துடன் அவருக்கு மாற்று இருக்கை ஏற்பாடு செய்யப்பட்து. போதையில் இருந்தவர் இயந்திர பொறியாளர் என்றும், விஜயபுராவில் இருந்து மங்களூருவிற்கு பயணம் செய்ததாகவும் அவர் இருக்கைக்கு அருகில் இருந்த மற்றொரு பயணி தெரிவித்தார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் நள்ளிரவில் நடந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த ஆண்டு நவ.26-ம் தேதி நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சக பெண் பயணி மீது போதை நபர் ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அடுத்த சம்பவமாக டிச.6-ம் தேதில் பாரிஸில் இருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஒரு பெண்ணின் காலி இருக்கையின் போர்வையில், ஆண் ஒருவர் சிறுநீர் கழித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதே போல நிகழ்வு அரசு பேருந்தில் தற்போது நடந்துள்ளது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in