நீரில் மூழ்கி இறந்து போன சிறுவன்; 8 மணி நேரமாக உப்புக்குவியலுக்குள் மூடி வைத்த தந்தை: கர்நாடகாவில் நடந்தது என்ன?

நீரில் மூழ்கி  இறந்து போன சிறுவன்; 8 மணி நேரமாக உப்புக்குவியலுக்குள் மூடி வைத்த தந்தை: கர்நாடகாவில் நடந்தது என்ன?

நீரில் மூழ்கி இறந்த தனது மகன் உயிர் பிழைத்து வருவார் என உப்புக்குவியலுக்குள் வைத்த தந்தை ஒருவரின் செயல் கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

கர்நாடகா மாநிலம் பல்லாரி மாவட்டம் சிரவாரா கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி கங்கம்மா. இவர்களுக்கு பாஸ்கர்(12) என்ற மகன் இருந்தார். நேற்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பாஸ்கரை வெகுநேரமாக காணவில்லை. இதனால் அவரது பெற்றோர் பல இடங்களில் பாஸ்கரைத் தேடினர். இந்த நிலையில் நீரில் மூழ்கிய நிலையில் பாஸ்கர் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

அவரது உடலை மீட்ட பெற்றோர், வீட்டிற்குக் கொண்டு வந்தனர். தண்ணீரில் மூழ்கியவர்கள் மீது உப்புக்குவியலைக் கொட்டினால் 2 மணி நேரத்தில் உயிர் பிழைத்து விடுவார்கள் என முகநூலில் படித்ததாக சேகர் கூறினார். அத்துடன் தனது மகனின் உடல் மீது உப்புக்குவியலைக் குவித்து வைத்தார். எப்படியாவது இறந்த தன் மகன் பிழைக்கமாட்டானா என 8 மணி நேரமாக உப்புக்குவியலுக்குள் மகனின் உடலை வைத்து காத்திருந்தார். ஆனால், பாஸ்கர் மீண்டு எழவில்லை. இதனால், அவரது உடலை பெற்றேர், அடக்கம் செய்தனர். பாஸ்கர் மீது உப்புக்குவியல் குவிக்கப்பட்டிருந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அறிவியலுக்கும், உண்மைக்கும் புறம்பான செய்திகளை முகநூல் பரப்பியவர்களால் இறந்து போன ஒரு சிறுவனின் உடல் 8 மணி நேரம் உப்புக்குவியலில் வைக்கப்பட்ட சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பரபரப்பையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in