தலைகீழாக கவிழ்ந்த ஆட்டோ; பறிபோன சிறுவனின் உயிர்: வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது சோகம்

தலைகீழாக கவிழ்ந்த ஆட்டோ; பறிபோன சிறுவனின் உயிர்: வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது சோகம்

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் வேலைக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய 16 வயது சிறுவன் ஆட்டோ விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகில் உள்ள இடைகால் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் மருதுபாண்டி வீரவநல்லூர் பகுதியில் ஒர்க் ஷாப் நடத்திவருகிறார். இவரது கடையில் இடைகாலை சேர்ந்த கரிகாலன் மகன் பிரமுத்து(16) என்பவர் வேலை செய்துவந்தார். நேற்று நள்ளிரவில் இவர்கள் இருவரும் ஒர்க்‌ஷாப் வேலையை முடித்துவிட்டு ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரம் இருந்த சின்ன பாலத்தில் மோதி, பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் 16 வயதே ஆன சிறுவன் பிரமுத்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இந்த விபத்தில் ஆட்டோவின் முன்பகுதியும் அப்பளம்போல் நொறுங்கியது. பாப்பாக்குடி போலீஸார் விபத்துக் குறித்துக் கேள்விப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த மருதுபாண்டியை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். குடும்ப பாரத்தை சுமக்க வேலைக்குச் சென்ற சிறுவன் சாலை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in