'என் தந்தை என்னைப் பாலியல் சித்ரவதை செய்யவில்லை': கோர்ட்டில் தம்பியுடன் தீக்குளிக்க முயன்ற சிறுமி

திருநெல்வேலி நீதிமன்றத்தில் சிறுமி, சிறுவன் தீக்குளிக்க முயற்சி
திருநெல்வேலி நீதிமன்றத்தில் சிறுமி, சிறுவன் தீக்குளிக்க முயற்சி'என் தந்தை என்னைப் பாலியல் சித்ரவதை செய்யவில்லை': கோர்ட்டில் தம்பியுடன் தீக்குளிக்க முயன்ற சிறுமி

தன்னை போலீஸார் மிரட்டி வாக்குமூலம் பெற்று பொய்யாக தன் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து இருப்பதாக சொல்லி சிறுவன், சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் தன் மகளை பாலியல் வன்மம் செய்ததாக அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு திருநெல்வேலியில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இன்று திடீரென அந்தத் தொழிலாளியின் 17 வயது மகளும், 15 வயது மகனும் தங்கள் உடலில் மண்ணெண்ணையை ஊற்றித் தீக்குளிக்க முயன்றனர்.

உடனடியாக போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அப்போது சிறுமி, " என் தந்தை என்னைப் பாலியல் சித்ரவதை செய்யவே இல்லை. பொய்யாக போலீஸார் என்னை மிரட்டி அப்படி வாக்குமூலம் பெற்றுவிட்டனர். என் அப்பா நிரபராதி. அதை உணர்த்தவே இப்படிச் செய்தோம் ”என்றார். போலீஸார் அவர்களை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.இச்சம்பவம் நெல்லை நீதிமன்றத்தில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in