மாரடைப்பால் ராணுவவீரர் பலி: திருமணமான ஒரேமாதத்தில் நடந்த துயரம்

மாரடைப்பால் ராணுவவீரர் பலி:  திருமணமான  ஒரேமாதத்தில்  நடந்த துயரம்

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கலில் திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் எல்லை பாதுகாப்புப் படை வீரர் மாரடைப்பால் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே உள்ள பிச்சவிளையைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் சரவணன்(32). இவர் ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வந்தார். இவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்தார். கடந்த 21-ம் தேதி. உறவினர்களை அழைத்து அவருக்குத் திருமணம் நடைபெற்றது.

சரவணன் மீண்டும் பணியில் சேர்வதற்காக நாளை கன்னியாகுமரியில் இருந்து தான் பணி செய்யும் இடத்திற்கு கிளம்புவதாக இருந்தது. இன்று காலையில் அவருக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டதில் அவர் உயிர் பிரிந்தது. இதுகுறித்து தகவல் தெரிந்ததும் கருங்கல் போலீஸார் விரைந்து வந்து, சரவணன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். திருமணமான ஒரேமாதத்தில் புதுமாப்பிள்ளை மாரடைப்பில் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in