வெடிகுண்டு அங்கு வைத்திருக்கிறேன், இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கும்: காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்ம போன்

வெடிகுண்டு அங்கு வைத்திருக்கிறேன், இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கும்: காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த  மர்ம போன்

ஹைதராபாத்தில் உள்ள காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று நள்ளிரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று நள்ளிரவு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், "சைதாபாத்தில் உள்ள ஐஎஸ் சதன் அருகே வெடிகுண்டு வைத்திருக்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில் அது வெடிக்கும்" என்று கூறி விட்டு தொலைபேசி அழைப்பைத் துண்டித்துள்ளார். இதனால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் கண்டறிதல் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்பகுதி முழுவதும் 2 மணி நேரமாக சோதனை நடத்தினர். ஆனால், அங்கு வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதன் பின் அது புரளி எனத் தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் எண்ணைக் கொண்டு அது யாருடையது என போலீஸார் ஆய்வு செய்தனர்.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் சந்தோஷ்நகரில் வசிக்கும் முகமது அக்பர் கான் என்பது தெரிய வந்தது. அவர் மீது பிரிவு 182, 186 ஐபிசி மற்றும் 70(பி) நகர காவல் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இன்று அதிகாலை அவரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in