7 வயது சிறுமிக்கு 10 நாட்களாக பாலியல் தொல்லை: 70 வயது முதியவர் கைது

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்7 வயது சிறுமிக்கு 10 நாட்களாக பாலியல் தொல்லை: 70 வயது முதியவர் கைது

டெல்லியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமியை 10 நாட்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்திய 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியின் குலாலி பாக் பகுதியைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமியின் ஆடைகளை அவிழ்த்து 70 வயது முதியவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக அச்சிறுமியின் தாய், நேற்று முன்தினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், கடந்த 10 நாட்களாக முதியவர் பாலியல் ரீதியாக தனது மகளைத் துன்புறுத்தியுள்ளார். இதையடுத்து அந்த முதியவரிடம் இப்பிரச்சினை குறித்து கேட்ட போது தகராறு செய்துள்ளார் என்று புகாரில் கூறப்பட்டிருந்தது.

இப்புகாரின் பேரில், டெல்லி பிரதாப் நகரில் வசிக்கும் பத்ரிநாத்(70) என்பவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர் சிறுமியைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது உறுதியானது.

இதையடுத்து இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 (கற்பழிப்புக்கான தண்டனை) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் பிரிவு 6-ன் கீழ் பத்ரிநாத் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் இன்று அவரை கைது செய்தனர். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in