இளைஞருடன் திருமண புகைப்படம்; 4 மாத கர்ப்பம் என கணவருக்கு மெசேஜ்: மகன் வயது ஆணுடன் மாயமான 40 வயது மனைவி

இளைஞருடன் திருமண புகைப்படம்; 4 மாத கர்ப்பம் என கணவருக்கு மெசேஜ்: மகன் வயது ஆணுடன் மாயமான 40 வயது மனைவி

முகநூல்  பழக்கம் காரணமாக  உருவான  கூடாநட்பால் தன் மகன் வயதுடைய  இளைஞருடன் 40 வயது பெண் மாயமாகியுள்ள சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நகை, பணத்துடன் மாயமானதாக அந்த பெண்  மீது  அவரது மகன் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே காவராப்பட்டு  கிராமத்தை சேர்ந்தவர் ஐயப்பன். இவர்  சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லலிதா(40). இவர்களுக்கு 22 வயது, 19 வயதில் இரு மகன்கள் உள்ளனர். லலிதா தனது மகன்கள் இருவருடன் ஒரத்தநாட்டில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். இந்நிலையில் திடீரென லலிதா 10 பவுன் நகை, பணத்துடன் நேற்றிரவு திடீரென மாயமானார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீஸில் லலிதாவின் மகன் புகார் அளித்தார். 

அதன்பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது. லலிதாவுக்கு முகநூல் மூலம்  22 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் நெருங்கி பழகி வந்திருக்கின்றனர்.  அதனை அடுத்து இருவரும் கணவன்- மனைவியாகவே சேர்ந்து வாழ்ந்து இருக்கின்றனர். அதன் விளைவாக  தற்போது அவர் நான்கு மாதம்  கர்ப்பமாக இருப்பதாகவும் தெரியவந்தது.

அதனால் அந்த இளைஞருடன் திருமணம் செய்து கொண்டு  சேர்ந்து வாழ முடிவு செய்த லலிதா அதன் பேரில் திருமணமும் செய்து கொண்டாராம். இது  தொடர்பாக தனது கணவன் ஐயப்பனுக்கு, தான் திருமணம் செய்து கொண்ட போட்டோவையும், ஆடியோ ஒன்றையும் லலிதா அனுப்பி வைத்துள்ளார். அந்த ஆடியோவில் தான் திருமணம் செய்து கொண்டுவிட்டதாகவும்,  தற்போது நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். 

இந்த தகவல்களை சேகரித்த ஒரத்தநாடு போலீஸார்  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மாயமான லலிதாவையும், இளைஞரையும் தேடி வருகின்றனர். தன் மகன் வயதொத்த இளைஞருடன் திருமணம் செய்து கொண்டு மாயமான லலிதாவின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in