பைக்கில் மின்னல் வேகத்தில் வந்த சிறுவன்; இழுத்துச் செல்லப்பட்ட குழந்தைக்கு நேர்ந்த சோகம்: கைது செய்யப்பட்ட தந்தை

பைக்கில் மின்னல் வேகத்தில் வந்த சிறுவன்; இழுத்துச் செல்லப்பட்ட குழந்தைக்கு நேர்ந்த சோகம்: கைது செய்யப்பட்ட தந்தை

விருத்தாசலம் அருகே சிறுவன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மோதியதில் மூன்று வயது சிறுமி, உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தை சிவகுரு
தந்தை சிவகுரு

கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே விஜயமாநகரம் புது ஆதண்டார் கொள்ளை கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகள் மலர்விழி ( 3). இந்த குழந்தை நேற்று மாலை அவரது வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது விஜயமாநகரம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த சிவகுரு மகன் கதிர்வாணன் (வயது 13) தனது தந்தையின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அவருடைய வயலுக்கு அந்த வழியாக வந்திருக்கிறார். எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய இருசக்கர வாகனம் சிறுமி மீது மோதி அவரை தரையில் இழுத்துச் சென்றது. சிறுமி மலர்விழி அந்த இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தாள்.

இதனை அறிந்த மங்கலம்பேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சிறுவன் கதிர்வாணன் மற்றும் அவர் தந்தை சிவகுரு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்தனர். சிறுவன் மங்கலம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். அவரிடம் இருசக்கர வாகனத்தை ஓட்ட கொடுத்த அவரது தந்தையின் செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in